17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan December 22, 2023, 10:48 am

நாடாளுமன்ற கூட்டத் தொடல் துணை ஜனாதிபதி ஜெகபத் தன்கார் பற்றி தரக்குறைவாகவும் , உருவ கேலி செய்த ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிகளின் போக்கை கண்டித்து பாஜக சார்பில் ராமநாதபுரத்தில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் தலைமை வகித்தார்.மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆத்மா கார்த்திக், மணிமாறன், நாகேந்திரன், மாவட்ட பொருளாளர் கோபால கிருஷ்ணன் , நகர் மன்ற உறுப்பினர் குமார் , நகர் தலைவர் கார்த்திகேயன், மாநில துணைத்தலைவர் கலாராணி, மாநில சிறுபான்மை பிரிவு நிர்வாகி அஜ்மல் கான் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில் காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்திக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!