மண்டபம் பகுதியில் கோயில் வளாகத்தில் தேங்கிய மழை நீரை அகற்றக்கோரி கிராம மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் இன்று மனு அளித்தனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் டிச.16 முதல் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக மண்டபம் பேரூராட்சி 17வது வார்டு யாதவர் தெரு மாரியம்மன் கோயில் பகுதியில் தண்ணீர் தேங்கி சுகாதார கேடு நிலவுகிறது. இதனால் மார்கழி மாத பஜனைக்கு வரும் பக்தர்கள் தொற்றுநோய் பரவும் என அச்சம் அடைந்தனர். தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தி சிமின்ட் சாலை அமைத்து தரக்கோரி பேரூராட்சி தலைவர் ராஜா, செயல் அலுவலர் இளவரசி ஆகியோரிடம் யாதவர் தெரு மக்கள் இன்று கோரிக்கை மனு அளித்தனர். பாஜக முன்னாள் கவுன்சிலர் பாலசுப்ரமணியன், யாதவர் மகாசபை நகர் தலைவர் திருமலை, சண்முகம் பூசாரி, மண்டபம் கிழக்கு மண்டல பாஜக தலைவர் கதிரவன், உலகநாதன், மனோகரன், மங்கள சாமி, கோவிந்தராஜ், பாஜக தரவு மேலாண் மாவட்ட செயலர் வராஹி முத்துராஜ், மகளிரணி நிர்வாகிகள் பூமாதேவி, சரஸ்வதி, ராணி, நாச்சியார் உள்பட பலர் பங்கேற்றனர்.
கோயில் வளாகத்தில் மழை நீர் தேக்கம்: அகற்றக்கோரி கிராம மக்கள் கோரிக்கை மனு
எழுதியவர்: mohan December 21, 2023, 7:36 pm




You must be logged in to post a comment.