இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் வண்ணப் புகை குப்பி வீச்சு தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா
விளக்கமளிக்க வேண்டும் என குரல் எழுப்பிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி உள்பட 141 எம்பிகளின் இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட விசிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் அற்புதக்குமார் தலைமை வகித்தார்.ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மண்டல துணைச் செயலர் விடுதலை சேகரன், மாநில துணைச் செயலர் விடுதலை கிட்டு, நாடாளுமன்ற தொகுதிச் செயலர் கோவிந்தராசு, திருவாடானை தொகுதி செயலர் பழனிக்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் சத்யராசு வளவன், மாவட்ட அமைப்பாளர்கள் சீனி ஜபருல்லா கான், பாண்டித்துரை, ராஜேஷ் குமார், பஞ்சநாதன், ரவி வளவன், சீனி சபீர் முஹமது,ராமநாதபுரம், திருவாடானை,ஆர்.எஸ் மங்கலம்,மண்டபம் ஒன்றிய செயலர்கள் நாகராஜ், ராதாகிருஷ்ணன், பாலமுருகன், ஆறுமுகம், கீழக்கரை, மண்டபம், தொண்டி நகர் செயலர்கள் ஹிதாயத்துல்லா, மோசஸ் வளவன், முருகன், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் அஜ்மல் கான், மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் விடுதலை மாரி கலந்து கொண்டனர்.ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினரை போலீசார் கைது செய்தனர்.
விசிக தலைவர் திருமாவளவன் உள்பட 141 எம்பிகள் இடைநீக்கம்: ராமநாதபுரத்தில் விசிக சாலை மறியல்
எழுதியவர்: mohan December 21, 2023, 6:45 pm




You must be logged in to post a comment.