17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மக்களுக்கு மூன்றாவது நாளாக மதுரை விமான நிலையத்திலிருந்து நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல மூன்று ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிலையில் உள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மக்களுக்கு மூன்றாவது நாளாக மதுரை விமான நிலையத்திலிருந்து நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல மூன்று ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிலையில் உள்ளது.

எழுதியவர்: mohan December 21, 2023, 6:23 pm

மதுரை விமான நிலையத்தில் இருந்து புயலால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு மூன்றாவது நாளான இன்று (21.12.23) காலை 4.30 மணிக்கு மத்திய தொழிலில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல் துறை,வருவாய்த்துறையினர் உதவியுடன் ஹெலிகாப்டரில் உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் இருந்தது.காலை ஆறு மணிக்கு புறப்பட வேண்டிய ஹெலிகாப்டர் வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுவதால் காலை 7:30 மணிக்கு கிளம்புவதாக கூறப்பட்டுள்ளது.தற்போது 3 ஆயிரத்து 180 கிலோ எடையுள்ள உணவு, குடிநீர், மருத்துவ பொருட்களை ஏற்றி தயார் நிலையில் 3 ஹெலிகாப்டர்களும் தூத்துக்குடி புறப்ப புறப்பட தயாராக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!