17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மழையால் பாதித்த பகுதிகள்: கூடுதல் கலெக்டர் ஆய்வு

மழையால் பாதித்த பகுதிகள்: கூடுதல் கலெக்டர் ஆய்வு

எழுதியவர்: mohan December 20, 2023, 1:48 pm

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்தது. இதில் கடலாடி வட்டம் வடக்கு நரிப்பையூர், மாணிக்கம் நகர், மூக்கையூர், எஸ்.தரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது. வெள்ளம் சூழ்ந்து பாதிப்பிற்குள்ளான பகுதிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகளை ஊரக வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் ரெத்தினசாமி, கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!