17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம்..

வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம்..

எழுதியவர்: mohan December 20, 2023, 11:44 am

கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழை காரணமாக அதிக வெள்ளப் பாதிப்பு பகுதிகளான தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்செந்தூர் , காயல்பட்டினம், திருநெல்வேலி, ஆகிய பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகி வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், நகர்மன்ற துணை தலைவர் ராஜையா ஆகியோர் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது நகராட்சி நிர்வாக ஆணையாளர் சுகந்தி, மேலாளர் சக்திவேல், சுகாதார அலுவலர் பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் சிவா, பொறியாளர் அப்துல் ரகுமான், உதவி பொறியாளர் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் சிட்டி திவான், Rtn வினோத் 14 வது வார்டு, சேர்மன் உதவியாளர்கள் ஹக்கீம், ஜாஹிர் உசேன், ஆஞ்சுநேயர் மற்றும் உணவக ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள் பலரும் உடனிருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!