18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரமக்குடியில் டிச.23 ல் தனியார் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்

பரமக்குடியில் டிச.23 ல் தனியார் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்

எழுதியவர்: mohan December 20, 2023, 11:33 am

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு & பயிற்சித்துறை, ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் & ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தனியார் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் டிச 23 காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 100 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கு வேலைநாடுநரை தெரிவு செய்ய உள்ளனர். 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தோர், ஐடிஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள், முதுகலை, இளங்கலை பட்டதாரிகள், செவிலியர், லேப் டெக்னீசியன் கல்வித்தகுதியுடைய வேலைவாய்ப்பற்ற அனைவரும் கலந்துகொண்டு தங்களுக்கான பணியை தேர்வு செய்ய அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். முகாமில் பங்கேற்க https://forms.gle/vZWbUPHnMgRGxXrP8 முன்பதிவு செய்து கொள்ளலாம்.இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல், 04567-230 160 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வாகி செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தைக்கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. வேலைநாடுநர் தங்களது முழு பயோடேட்டா, அனைத்து அசல் கல்விச் சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இத்தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!