17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தூத்துக்குடியில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராஜபாளையம் நகராட்சி சார்பில் 1 லட்சம் மதிப்பிளான நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தனர்

தூத்துக்குடியில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராஜபாளையம் நகராட்சி சார்பில் 1 லட்சம் மதிப்பிளான நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தனர்

எழுதியவர்: mohan December 19, 2023, 7:42 pm

விருதுநகர் இராஜபாளையம் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி பகுதி மக்களுக்கு இராஜபாளையம் நகராட்சி மற்றும் கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தனர்.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடையும் வகையில் பால் ரஸ்க் ரொட்டி மற்றும் உணவு சமைக்க தேவையான உணவு பொருட்கள் குடிநீர் பாட்டில்கள் உட்பட 4000 அனுப்பி வைக்கப்பட்டது.இராஜபாளையம் அம்மா உணவகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வினை நகர மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் முன்னின்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் நாகராஜன் இராஜபாளையம் திமுக கவுன்சிலர்கள் நகராட்சி அதிகாரிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!