18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 45 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கிய மருத்துவர்.

தென் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 45 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கிய மருத்துவர்.

எழுதியவர்: mohan December 19, 2023, 7:39 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் விஜயராகவன்.போகோ சாரிட்டபிள் டிரஸ்ட் எனும் பெயரில் அறக்கட்டளை அமைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்.இந்நிலையில் வடகிழக்கு வளிமண்டல தாழ்வு நிலை காரணமாக பெய்த கன மழையில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டமக்களுக்கு உதவும் விதமாக சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் பேருக்கு உணவு மற்றும் 15 ஆயிரம் பேருக்கு தேவையான பாய் போர்வை ,அத்திய வசிய பொருட்களான அரிசி, பருப்பு,பலசரக்கு, பிரட் பழம் , மெழுகுதிரி உள்ளிட்ட பொருட்களை தனது குழுவினருடன் தனக்கன்குளத்தில் உள்ள அழகர் மகாலில் இருந்து தயார் செய்து நேரடியாக தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வழங்க புறப்பட்டு சென்றார். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக அரிசி, பருப்பு,, பால், பழம், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!