வடகிழக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக ஏற்பட்ட தாழ்வுத்த மையத்தால் தூத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களில் கடும் புயல் மழை பெய்து வருகிறது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.இந் நிலையில் திரு வைகுண்டம் பகுதியில் வெள்ளப் பகுதியில் சிக்கிய கர்ப்பிணி பெண் உள்பட நான்கு பேரை சூலூரில் இருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மதுரை கொண்டுவரப்பட்டனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெருமாள்( வயது 27) மற்றும் கர்ப்பிணி பெண் அனுசுயா மயில் (வயது 27 )சேது லட்சுமி (வயது 54 )தாஸ் வருண் (வயது 11/2) நான்கு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு மதுரை மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டனர்.மதுரை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வேலம்மாள் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்




You must be logged in to post a comment.