18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தரைப்பாலம் சேதமடைந்ததால் மூன்று கண்மாய் விவசாயிகள் பாதிப்பு. தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதி

தரைப்பாலம் சேதமடைந்ததால் மூன்று கண்மாய் விவசாயிகள் பாதிப்பு. தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதி

எழுதியவர்: mohan December 19, 2023, 12:47 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் பகுதியில் இருந்து இனாம் கோவில்பட்டிக்கு செல்லும் சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனால் தற்காலிக பாலம் அமைத்து அப்பகுதியில் இருந்து விவசாயத்திற்கு செல்லக்கூடிய விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் தளவாய்புரம் பகுதியில் செயல்படக்கூடிய கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் சென்று வந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் காரணமாக அனைத்து கண்மாயில் நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து தரைப்பாலம் சேதம் அடைந்ததால் இந்த பாதையை கடந்து செல்லக்கூடிய பூக்குடி கண்மாய். களந்தூர் கண்மாய் பூவானி கண்மாய் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 500 ஏக்கர் விவசாயத்திற்க்கு சென்று வரும் விவசாயிகள் விவசாயத்துக்கு தேவையான உரம் போன்றவற்றை எடுத்துச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் தளவாய்புரம் பகுதியில் செயல்பாடு கூடிய கார்மெண்ட்ஸ் நிறுவனங்களுக்கு இந்த பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பாதையை கடந்து சென்று வந்த நிலையில் இந்த பாதை சேதமடைந்ததால் வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் உடைந்த தற்காலிக பால்த்தை சரி செய்து போக்குவரத்துக்கு வழி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!