மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதப்படும் 58 கிராம கால்வாய்க்கு வைகை
அணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் உள்பட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுவரை தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்படுத்தி வருவதால் இதுவரை தண்ணீர் திறக்காததை கண்டித்து எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் விவசாயிகள் பொதுமக்கள் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் தேவர் சிலை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.தகவலறிந்த போலிசார் டிஎஸ்பி நல்லு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.போராட்டத்தை கைவிட மறுத்ததால் எம்எல்ஏ அய்யப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் விவசாயிகளை கைது செய்தனர்.
58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ அய்யப்பன் உள்ளிட்ட விவசாயிகள் கைது.
எழுதியவர்: mohan December 19, 2023, 12:42 pm




You must be logged in to post a comment.