18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் மாவட்டத்திற்கு டிச.26 ல் உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு டிச.26 ல் உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு

எழுதியவர்: mohan December 18, 2023, 7:30 pm

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு டிச. 26 அன்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 2024 ஜன.6 வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 2024 ஜன 6 அன்று வழக்கம்போல் இயங்கும்.இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், டிச. 26 அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார் நிலை கருவூலங்கள், அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!