17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வைகைக் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு

வைகைக் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு

எழுதியவர்: mohan December 18, 2023, 3:16 pm

தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையயில்வைகை அணையில் இருந்து பத்தாயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் விடுக்கப்பட்ட நிலையில் சோழவந்தான் பகுதிகளில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு அந்தந்த பகுதி ஊராட்சியின் சார்பாக ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது சோழவந்தான் அருகே உள்ள முள்ளி பள்ளம் ஊராட்சியில் ஊராட்சி சார்பாக வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது அதில் வைகை அணையில் தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் ஆற்றில் குளிக்கவும் மற்ற காரணங்களுக்காக இறங்க வேண்டாம் எனவும் கால்நடைகளை ஆற்றின் கரையோரங்களில் அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் படியும் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!