மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி ஊராட்சியைச் சேர்ந்தது டி.குன்னூத்துப்பட்டி.இக்கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் உசிலம்பட்டி பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் டி.குன்னூத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மழைநீர் தேங்கி வகுப்பறையிலும் தண்ணீர் புகுந்தது.இதனால் பள்ளி மாணவ மாணவிகள் தரையில் அமர முடியாமல் நின்று கொண்டே இருந்தனர்.இதனையறிந்த பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி இடைவெளியில் பாதியில் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.இதனால் ஆசிரியகள் என்ன செய்வது என்று அறியாமல் நின்றனர்.
டி.குன்னூத்துப்பட்டியில் பள்ளி வகுப்பறையில் தண்ணீர் தேங்கியதால் பாதியில் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெற்றோர்கள்.
எழுதியவர்: mohan December 18, 2023, 1:56 pm




You must be logged in to post a comment.