18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எழுமலையில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் கட்டிடம் மழை நீரில் ஒழுகுவதால் குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

எழுமலையில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் கட்டிடம் மழை நீரில் ஒழுகுவதால் குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

எழுதியவர்: mohan December 18, 2023, 1:26 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் உள்ளது அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. இந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது.இங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் உசிலம்பட்டி பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் எழுமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடத்தில் மழைநீர் தேங்கி ஒழுகியது. இன்று காலையில் வழக்கம் போல் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர். ஆனால் பள்ளி கட்டிடத்துக்குள் மழை நீர் ஒழிகி பள்ளிக்குள் தண்ணீர் தேங்கி நின்றதால் வேறு வழி இன்றி இன்று பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு திரும்பி வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.தென் மாவட்டங்களில் ரெட் அலர்ட் வானிலை மையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்த போதும்; மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பள்ளிகளுக்கு கூட விடுமுறை அளிக்கவில்லை. இதனால் கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவ மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர். பலர் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!