தமிழகம் முழுவதும் இன்று மக்களுடன் முதல்வர் என்னும் தலைப்பில் சிறப்பு முகாம் ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் எனும் தலைப்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் நலத்துறை சார்பிலும் வருவாய் வட்டாட்சியர் மேலாண்மை துறை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வசதி கூட்டுறவு துறை ஆதிதிராவிடர் நலத்துறை நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்குதல் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து துறையில் இருந்தும் முகாம் நடைபெற்றது. ஆனால் இங்கு பொதுமக்கள் யாரும் வராததால் முகாம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வந்திருந்த சிலரும் இங்கு தொழில்நுட்ப கோளாறால் கணினி சரியாக இயங்காததால் பொதுமக்கள் புறக்கணித்து சென்றனர்.
உசிலம்பட்டியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் வெறிச்சோடி காணப்பட்டது.
எழுதியவர்: mohan December 18, 2023, 1:23 pm




You must be logged in to post a comment.