17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் அருகே ரூ.17.32 கோடியில் ரயில்வே மேம்பாலம்: மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்த மக்கள்

ராமநாதபுரம் அருகே ரூ.17.32 கோடியில் ரயில்வே மேம்பாலம்: மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்த மக்கள்

எழுதியவர்: mohan December 17, 2023, 10:55 am

இராமநாதபுரம் அருகே லாந்தை ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் சூழ்ந்ததால் லாந்தை, கண்ணனை, பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி, திரிபுனை கிராம மக்கள் 5 கிமீ தூர சுற்றுப்பாதையில் தங்கள் கிராமங்களுக்கு செல்லும் நிலை நிலவி வந்தது. இப்பாதையை மூடக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், நவ.18 ல் ராமேஸ்வரத்திற்கு வந்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கிராம மக்கள் முறையிட்டனர். லாந்தை ரயில்வே சுரங்கப்பாதைக்கு மாற்றாக, மேம்பாலம் அமைக்க ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவிடம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கிராம மக்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்தார். அமைச்சர் நிர்மலா சீதா ராமன் பரிந்துரையை ஏற்று, லாந்தை சுரங்கப்பாதைக்கு மாற்றாக ரூ.17 கோடியே 32 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் குடை வடிவ மேம்பாலம் அமைக்க ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் படி ரயில்வே அமைச்சகம் அரசாணை பிறப்பித்துள்ளது.இதனால் மகிழ்ச்சி அடைந்த 5 கிராம மக்கள் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!