17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுகாதார வளாக கட்டிடங்கள் காட்சிப் பொருளாக இருக்கும் அவலம். ஊராட்சி மன்ற நிர்வாகம் பயன்பாட்டிற்க்கு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சுகாதார வளாக கட்டிடங்கள் காட்சிப் பொருளாக இருக்கும் அவலம். ஊராட்சி மன்ற நிர்வாகம் பயன்பாட்டிற்க்கு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

எழுதியவர்: mohan December 17, 2023, 10:40 am

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி மன்ற பகுதிக்கு உட்பட்ட கம்மாபட்டி ESI நகர் பகுதிகளில் சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஆண் பெண் சுகாதார வளாகங்கள் பல மாதங்களாக செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது.அப்பகுதி பொது மக்கள் பல தடவை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் ஊராட்சி மன்ற தலைவர் இசக்கி ராஜாவை நேரில் சந்தித்து கூறினாலும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்து வருகிறார்.மேலும் சமூக ஆர்வலர்கள் கூறும் போது இது மழைக்காலம் ஆண்களும் பெண்களும் குழந்தைகள் வயதானவர்கள் பொதுபாதயை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர் இதனால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளது எனவே ஊராட்சி மன்ற நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக சுகாதார வளாகங்களை திறந்து மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!