18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு மருத்துவமனை முன்பு ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்தும் அரசு பேருந்து மோதி விபத்து இரண்டு பேர் படுகாயம்

அரசு மருத்துவமனை முன்பு ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்தும் அரசு பேருந்து மோதி விபத்து இரண்டு பேர் படுகாயம்

எழுதியவர்: mohan December 17, 2023, 10:35 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் PACR.அரசு மருத்துவமனை முன்பு இராஜபாளையத்தில் இருந்து மாங்குடி சென்று மாங்குடியில் இருந்து இராஜபாளையம் திரும்பி வந்த அரசு பேருந்தை சக்திவேல் என்ற ஓட்டுநர் மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்த பொழுது. திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்பி சொந்த ஊர் வந்து கொண்டிருந்த பொழுது.விழுப்புரம் மாவட்டம் T.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் அன்பரசு வயது 29 நின்று கொண்டிருந்த அரசு பேருந்து பின்புறம் மோதியதில் அரசு பேருந்து நடத்துனர் வேல்முருகன் மற்றும் அரசு பேருந்தில் பயணம் செய்த தனியார் கல்லூரி மாணவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்தில் பயணம் செய்த ஒருவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார் மற்ற ஐயப்ப பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் இவ் விபத்து குறித்து தெற்கு காவல் நிலைய போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

.செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!