17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மழையால் நனையாமல் இருக்க உதவியாளருக்கு குடை பிடித்த மாவட்ட ஆட்சியர்

மழையால் நனையாமல் இருக்க உதவியாளருக்கு குடை பிடித்த மாவட்ட ஆட்சியர்

எழுதியவர்: mohan December 16, 2023, 6:13 pm

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை ஊராட்சி மக்களிடம் மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரன் இன்று குறைகள் கேட்டறிந்தார். இதையடுத்து மங்களநாதசுவாமி கோயில் நடராஜர் சன்னதியில் டிச.18ல் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ள ஆருத்ரா தரிசனம் திருவிழா ஏற்பாடுகளை ஆய்வு செய்துவிட்டு ராமநாதபுரம் புறப்படத் தயாரானார். மாவட்ட அப்போது திடீரென மழை பெய்ததால் ஆட்சியரின் உதவியாளர் ஆட்சியர் மழையில் நனைந்து விடாமல் இருக்க உதவியாளர் குறை பிடித்துக் கொண்டு நனைந்து படி வந்தார்.இதனைப் பார்த்த ஆட்சியர் உதவியாளர் பிடித்திருந்த குடையை வாங்கி உதவியாளர் தோளில் கை போட்டு கொண்டு உதவியாளரை குடை பிடித்து அழைத்து வந்தார். தனது உதவியாளர் மழையில் நனைந்து விடாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் குடை பிடித்து அழைத்து வந்த நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. கீழக்கரை தாசில்தார் பழனி குமார், ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் உடன் வந்தனர்.

ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!