எரிசக்தி திறன் பணியகம், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் மின் சிக்கன விழிப்புணர்வு பிரசாரம் இராமநாதபுரத்தில் இன்று நடந்தது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஸ்ரீராம் துவக்கி வைத்தார். வீடுகள், தொழிற்சாலைகள், வணிகம், வேளாண் மற்றும் மின்சாத ஆடம்பர பொருட்களின் பயன்பாடுகளில் ஏற்படும் சுற்றுச்சுழல் பாதிப்பு குறித்து பிரசாரம் செய்தனர். டிச.14ல் துவங்கி டிச.20 வரை நடைபெற்றும் 1 வார விழா தொடர்பாக துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். மின்வாரிய செய்தி தொடர்பு அலுவலர் சாதனா,உதவி செயற்பொறியாளர்கள் பாலமுருகன், உதவி பொறியாளர்கள் குரு வேல், சுதாகர், செல்வி, வெற்றி வேல் மற்றும் மின்வாரிய அனைத்து பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரத்தில்மின் சிக்கனவிழிப்புணர்வுபிரசாரம்
எழுதியவர்: mohan December 15, 2023, 7:20 pm




You must be logged in to post a comment.