18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீ திம்மம்மா திருக்கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

ஸ்ரீ திம்மம்மா திருக்கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

எழுதியவர்: mohan December 15, 2023, 4:16 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் , குறிப்பிட்ட (ஸ்ரீவெலம நாயுடு) சமுதாயத்திற்கு பாதிக்கப்பட்ட , புதிதாக வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்ட ஸ்ரீ திம்மம்மா திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.முன்னதாக யாகசாலையில் கலச தீர்த்தங்களை வேத, விற்பன்னர்களால் பூஜிக்கப்பட்ட பின்பு, கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு சம்ப்ரோஷணம் செய்தனர். இதனை தொடர்ந்து, அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்களுக்கு கும்பாபிஷேகம் செய்த கலசத் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது. இதனிடையே யாகசாலையில் ஐம்பொன் சிலைகளாலான பழங்கால ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ அம்மன் , ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீஅனுமான் உள்ளிட்ட பல்வேறு சிலைகளை வைத்து பூஜை செய்யப்பட்டன.இதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!