தென்காசியில் இரத்ததான முகாம் நடந்தது. இம்முகாமை அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. ஜெஸ்லின் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர்கள் சங்கம் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. தென்காசி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். ஜெஸ்லின், இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும், மறைந்த மின் பொறியாளர் சங்க பொறுப்பாளர்களின் நினைவாக நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் தென்காசி மாவட்ட மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதி கொடை அளித்தனர். இதில் உறைவிட மருத்துவர் செல்வபாலா மற்றும் மூத்த மருத்துவர் ராஜேஷ் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். திருநெல்வேலி மண்டல தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரி இசக்கி பாண்டி ஆலோசனையில் மின் பொறியாளர்கள் சங்கரபாண்டி, உசேன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் மின்வாரிய பணியாளர்கள் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர். பிரேமலதா இரத்த வங்கி மருத்துவ குழுவினரையும், மின்வாரிய பணியாளர்களையும் வெகுவாக பாராட்டினார். உறைவிட மருத்துவர் செல்வபாலா மற்றும் ரத்த வங்கி குழுவினர், இரத்ததானம் வழங்கிய அனைத்து மின்வாரிய ஊழியர்களுக்கும் நன்றி கூறினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.