விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியில் உள்ள, மனிதவள மேம்பாட்டு தொண்டு நிறுவனம் சார்பில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் ஹெச்.ஆர்.எப் அமைப்பின் திட்ட இயக்குநர் விஜயகுமார், தொழிலதிபர் ஆசைத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்




You must be logged in to post a comment.