17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையில் புதிய நிர்வாகிகள் தேர்வு..

தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையில் புதிய நிர்வாகிகள் தேர்வு..

எழுதியவர்: mohan December 14, 2023, 10:03 am

தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையில் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழு கூட்டம் அருளாட்சி அப்துர் ரஹீம் உலவி தலைமையில் கடையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி வளாகத்தில் டிச.13 அன்று நடைபெற்றது. இதில் ஹாபிழ் முஹம்மது சுஹைல் துவக்கமாக கிராஅத் ஓதினார். வடகரை ஷாகுல் ஹமீது உலவி கீதம் பாடினார். தென்காசி ஷம்சுத்தீன் பைஜி வரவேற்றார். கே.ஐ. ஷாகுல் ஹமீது வாஹிதி கடந்த கால நிகழ்வுகளை எடுத்துக் கூறினார். கடையநல்லூர் செய்யது இப்ராஹீம் அன்வாரி பொதுக்குழு கூட்டத்தின் நோக்கத்தை தெளிவாக எடுத்துக் கூறினார். வட்டார பொறுப்பாளர்கள் தென்காசி காதர் வலி முஸ்தபா பைஜி, முகைதீன் அப்துல் காதர் பாகவி, அபூபக்கர் மிஸ்பாஹி, புளியங்குடி சதாம் ஹுசைன் காஷிபி, அபூபக்கர் சித்தீக் மன்பயீ, சங்கரன்கோவில் ஆஷிக் உஸ்மானி, ஷாகுல் ஹமீது பைஜி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இதை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவராக தென்காசி எம்.எச். ஷம்சுத்தீன் உலவி, மாவட்ட செயலாளராக கடையநல்லூர் எ.ஒய். முஹ்யித்தீன் பைஜி, மாவட்ட பொருளாளராக வாவா நகரம் ஆர். முஹம்மது ரபீக் பைஜி, சுரண்டை வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளராக ஷாகுல் ஹமீது பைஜி ஆகியோர் ஏக மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலானா பி.ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சான்றிதழ்கள் வழங்கினார். இப்ராஹிம் அன்வாரி நன்றியுரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் ஜாஹிர் ஹுசைன் பைஜி, காஜா முயீனுத்தீன் பைஜி, இத்ரீஸ் ஷாபி அஹ்மது ஆலிம் பைஜி ஆகியோர் முன்னின்று செய்தனர். மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 300 இஸ்லாமிய அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!