17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக அரசு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்த உழவர் சந்தையில் , விவசாயிகள் கடை வைத்து விற்பனை செய்ய அழைப்பு.

தமிழக அரசு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்த உழவர் சந்தையில் , விவசாயிகள் கடை வைத்து விற்பனை செய்ய அழைப்பு.

எழுதியவர்: mohan December 13, 2023, 4:30 pm

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள உழவர் சந்தையை , தமிழக அரசு புதிதாக சீரமைத்து பேவர் பிளாக் சாலை அமைத்து, மேற்கூரைகள் புதுப்பிக்கப்பட்டும், விவசாயிகளின் நலன் கருதி தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.திருமங்கலம் – உசிலை சாலையில் சாலையோரங்களில் இருபுறமும் பழங்கள், மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகள், பாதுகாப்பற்ற முறையில் இருப்பதினாலும், அவர்களின் நலன் கருதி உழவர் சந்தையில் இலவசமாக அவர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய 80 கடைகளுடன் , எலக்ட்ரானிக் எடை இயந்திரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதால், திருமங்கலம் பகுதி விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேளாண் துறை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது…

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!