திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பிள்ளையார் நத்தம் ஊராட்சியில், சொக்குப் பிள்ளை பெட்டி ஏழாவது வார்டில் ,குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் ஆனது செல்ல வழி இன்றி குளம் போல் தேங்கி உள்ளது. இவ்வாறு மழைநீர் தேங்கி இருப்பதால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் இருப்பதால், இதை சரி செய்ய பலமுறை மனு அளித்தும் ஊராட்சி நிர்வாகம் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, மழைநீர் தேங்காத வண்ணம் சீரமைக்க நடவடிக்கை எடுத்து சரி செய்யும் படி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளில் குளம் போல் சூழ்ந்துள்ள மழை நீர் நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்.
எழுதியவர்: mohan December 13, 2023, 10:40 am




You must be logged in to post a comment.