17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேலப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் பேருந்து இயக்க வேண்டும்; மமகவினர் ஆட்சியரிடம் கோரிக்கை..

மேலப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் பேருந்து இயக்க வேண்டும்; மமகவினர் ஆட்சியரிடம் கோரிக்கை..

எழுதியவர்: mohan December 11, 2023, 7:42 pm

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதிகமான மக்கள் வசிக்கும் மேலப்பாளையம் பகுதியில், அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் வராததால் நோயாளிகள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் செல்லும் நிலை உள்ளது. இந்த அவல நிலையை போக்கிட அரசு விரைந்து ஆஸ்பத்திரி நிறுத்தத்திற்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தமுமுக மமக மாவட்ட பொருளாளர் தேயிலை மைதின் மற்றும் மமக மாவட்ட துணைச் செயலாளர் அ. காஜா, மமக செயலாளர் E.M அப்துல் காதர், தமுமுக செயலாளர் A.R பாஷா,மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் குதா,ஊடக அணி செய்யது, IPP மாவட்ட செயலாளர் நாமியா அசன், மமக பகுதி துணைச் செயலாளர் பெயின்டர் இஸ்மாயில், பகுதி மமக துணைச் செயலாளர் அல்-ஜன்னத் செய்யதலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!