18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமேஸ்வரத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் நடை பயணம்

ராமேஸ்வரத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் நடை பயணம்

எழுதியவர்: mohan December 11, 2023, 7:20 pm

இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். பாம்பன் ரயில் பாலம் பணிகளை துரிதமாக முடித்து ரயில் சேவையை விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமேஸ்வரம் தாலுகாவிற்குட்பட்ட ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுபாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீன்பிடி தொழிலை பாதுகாக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமேஸ்வரத்தில் 2 நாள் நடைபயணம் நடந்தது. தனுஷ்கோடி சாலை ராமகிருஷ்ணபுரத்தில் தாலுகா செயலர் சிவா தலைமையில் மார்க்சிஸ்ட் மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். புதுரோடு, நம்பு கோவில் தெரு, எம்ஆர்டி நகர், வேர்க்கோடு, என்.எஸ்.கே.வீதி, வர்த்தகன் தெரு, மேலவாசல், வீரபத்ர சுவாமி கோயில் தெரு, பழைய போலீஸ் லயன், காமராஜர் நகர், சௌந்தர்யா அம்மன் கோயில் தெரு, திட்டக்குடி, மேலத்தெரு வழியாக ராமர் தீர்த்தம் வடக்கு பகுதியில் நிறைவுற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கருணாகரன் நிறைவுரை ஆற்றினார். பேசினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜஸ்டின், ஆரோக்கிய நிர்மலா, தாலுகா குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, ராமச்சந்திர பாபு,கிளைச் செயலாளர்கள் பொன்னுச்சாமி, வெங்கடேஸ்வரி, உமயேஸ்வரி, ஸ்ரீலேகா, ரூபா தாரணி, உமையம்மாள், ரேணுகா, வெங்கடேஸ்வரி, ஆனந்தி உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!