17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புளியங்குடி நகர திமுக சார்பில் புயல் நிவாரணப் பொருட்கள்

புளியங்குடி நகர திமுக சார்பில் புயல் நிவாரணப் பொருட்கள்

எழுதியவர்: mohan December 11, 2023, 3:45 pm

புளியங்குடி நகர திமுக சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா அறிவுறுத்தலின் பேரில், புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, நகர்மன்ற தலைவர் விஜயா செளந்தர பாண்டியன் ஆகியோர் தலைமையில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் 170 அரிசி பைகள், 500 தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்கள், ரொட்டி பாக்கெட்கள், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் புளியங்குடி நகர அவை தலைவர் வேல்சாமி பாண்டியன், புளியங்குடி நகரக் கழகச் செயலாளர் அந்தோணிசாமி, புளியங்குடி நகர்மன்ற தலைவர். விஜயா செளந்தர பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் பொன்னுத்துரைச்சி, பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது, நகரக் கழகப் பொருளாளர் காஜா மைதீன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிச்சையா, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், நகரக் கழக சிறுபான்மை அணி அமைப்பாளர் சேக் மைதீன், தென்காசி வடக்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் அன்பு ராஜன், இளைஞர் அணி சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம் சேதுராமன், புளியங்குடி வருவாய் ஆய்வாளர், புளியங்குடி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!