இராமநாதபுரம் வேளாண் வட்டாரம் சார்பில் வெண்ணத்தூர் கிராமத்தில் உலக மண் தினம் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன்
தலைமை வகித்தார்.அவர் பேசுகையில்,பயிர் சாகுபடியில் களைக் கொல்லி பயன்பாட்டை குறைத்துக் கொள்வதுடன், மண் பரிசோதனை முடிவுகளின்படி தேவையான அளவு உரங்களை மட்டுமே பயிர்களுக்கு அளிக்க வேண்டும் என்றார்.ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானிய விபரங்கள் குறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சரவணக்குமார்
பேசினார்.உயிர் உரஉற்பத்தி மைய வேளாண் அலுவலர் அம்பேத்குமார், மேற்பார்வையாளர் மங்களசாமி, வேளாண் அலுவலர் தமிழ் மற்றும் வெண்ணத்தூர் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது.உதவி வேளாண் அலுவலர், வட்டார தொழில் நுட்ப மேலாளர், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
வெண்ணத்தூர் கிராமத்தில்உலக மண் தினம்
எழுதியவர்: mohan December 11, 2023, 12:59 pm




You must be logged in to post a comment.