17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாய் பேசாதோர், காது கேளாதோர் சங்க அமைப்பு கூட்டம்

வாய் பேசாதோர், காது கேளாதோர் சங்க அமைப்பு கூட்டம்

எழுதியவர்: mohan December 11, 2023, 10:11 am

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாய் பேசாதோர், காது கேளாதோர் பாதுகாப்பு உரிமைகள் மாநில சங்க ராமநாதபுரம் மாவட்ட கிளை அமைப்பு கூட்டம் நடந்தது. பிரான்சிஸ் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் ஜீவா, மாநில செயலாளர் சொர்ணவேல், மாநில பொருளாளர் பவானி, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்போர் சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட தலைவர் ராஜேஷ் ஆகியோர்பேசினர். மாவட்ட தலைவராக நந்தகோபால், துணை தலைவர்களாக பிரான்சிஸ், ராஜேஷ் செயலாளராகசெல்வராஜ், துணை செயலாளராக நாகூர் கனி, பொருளாளராக தமிழ்செல்வம், , மகளிரணி நிர்வாகிகளாக சுலைஹா ராணி, கனகவள்ளி, செயற்குழு உறுப்பினர்களாக நவீன், சுல்தான் அலி, கண்ணன், சிங்காரவேலன், முனியசாமி, தமிழ்ச்செல்வன், ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.மாவட்ட ஆட்சியரகம், எஸ்பி அலுவலகம், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்க வேண்டும். மாதம் ரூ.1,500 உதவித்தொகை பெறும் மாற்றுத்திறன்மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணம், பங்களிப்புடன் கூடிய சேமிப்பு நிவாரணம் மீன்பிடி குறைவு கால நிவாரணம், உள்ளிட்ட அனைத்து சலுகைகளை தொடர்ந்து வழங்க வேண்டும். வாய் பேசாதோர், காது கேளாதோர் சிறப்பு பள்ளி ராமநாதபுரத்தில் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!