18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாயமான பெண் ஊரணி நீரில் சடலமாக மீட்பு

மாயமான பெண் ஊரணி நீரில் சடலமாக மீட்பு

எழுதியவர்: mohan December 10, 2023, 10:49 am

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி முத்துமாரி, 55. இவர்கள் தங்கச்சிமடம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பனைக்குளம் அருகே பொன்குளம் பகுதியில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து வந்தனர். குடி பழக்கமுடைய முத்துமாரி டிச.7 காலை போதையில் இருந்தபோது மாயமானர். பல இடங்களில் தேடியபோது, பொன்குளம் ஊரணி நீரில் நேற்றிரவு இறந்து கிடந்தார். பொதுமக்கள் தகவலின் படிமுத்துமாரி உடலைதேவிபட்டினம் போலீசார் மீட்டு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முத்துமாரி இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!