அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 77வது பிறந்த நாள் கொண்டாட்டம் ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று நடந்தது. இதையொட்டி அரண்மனை கோட்டைவாசல் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினரும், மாவட்ட பொருளாளரும், ராஜாராம் பாண்டியன் (ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர்) தலைமை வகித்தார். திருப்புல்லாணி வட்டார காங் கமிட்டி தலைவர் சேது பாண்டியன்,ராமநாதபுரம் நகர் தலைவர் டிஎம்எஸ் கோபி உள்பட பலர் பங்கேற்றனர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு புத்தாடை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அகில இந்திய காங்., முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள்: ராமநாதபுரத்தில் கொண்டாட்டம்
எழுதியவர்: mohan December 10, 2023, 10:46 am




You must be logged in to post a comment.