திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம்
சின்ன ஏர்வாடி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 41 பேர் பல்வேறு பிரிவுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பை வென்றனர். இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் ஹன்சி ரவி கோப்பை வழங்கினார். சிறப்பான முறையில் பயிற்றுவித்த சிலம்பம், கராத்தே பயிற்றுநர் வாலிநோக்கம்அஹமது மரைக்கான், கோப்பையை வென்ற மாணவர்களை, சின்ன ஏர்வாடி நடுநிலைப் பள்ளி நிர்வாகம், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
மாநில அளவிலான கராத்தே போட்டி: அரசு பள்ளி மாணவர்கள் சாம்பியன்
எழுதியவர்: mohan December 9, 2023, 7:30 pm




You must be logged in to post a comment.