18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

எழுதியவர்: mohan December 9, 2023, 7:27 pm

இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன்திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள்கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடந்தது.எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் தலைமை வகித்தார்.டிச.18ல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த கோரி மனு அளித்தல்,2024 ஜன. 20ல் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டமைப்பிற்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக அப்துல் ஜமீல் இணை ஒருங்கிணைப்பாளர்களாக பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன்,இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்க பொறுப்பாளர் பாவெல், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி செயலாளர் அன்வர் அலி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மதிமுக மாவட்ட செயலாளர் சுரேஷ், ஐந்திணை மக்கள் கட்சி மாநில இணை ஒருங்கிணைப்பாளர்ஸ்டீபன் ராஜ்,எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலர் நஜ்முதீன், சிபிஎம் (எம்எல்) சந்தனமேரி, தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலர் ரஞ்சித், மக்கள் அதிகாரம் மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன், பாமக சார்பில் லட்சுமணன் , சுதந்திர வளர்ச்சிக்கான விவசாயிகள் சங்க அமைப்பாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சமூக ஆர்வலர் தமிழ்வாணன் நன்றி கூறினார்

ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!