17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வட்டாணம், தேளூர் கிராம மக்களிடம் கலெக்டர் குறை கேட்பு

வட்டாணம், தேளூர் கிராம மக்களிடம் கலெக்டர் குறை கேட்பு

எழுதியவர்: mohan December 9, 2023, 7:01 pm

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வட்டாணம், தேளுர் கிராம பொதுமக்களிடம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.இவ்விரண்டு கிராமங்களின் , குடிநீர், சாலை, போக்குவரத்து, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடர்பாக கேட்டறிந்தார். இதன் பின்னர் கலெக்டர் கூறுகையில், கிராமப்புற மக்களின் தேவையறிந்து எண்ணற்ற திட்டங்களை அறிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்செயல்படுத்தி வருகிறார். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் கிராமப்புற மக்கள் பொருளாதார நிலையில் ஏற்றம் பெறும் வகையில் பல எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் திட்டங்களை அறிந்து தொடர்புடைய அலுவலர்களை அணுகி அத்திட்டங்களால் கிடைக்கப்பெறும் பயன்கள் குறித்து கேட்டறிந்து, பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரமோகன், கோட்டைராஜ், திருவாடானை வட்டாட்சியர் கார்த்திகேயன், தேளூர் ஊராட்சி தலைவர் அய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!