17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் குடியிருப்பு பகுதி அருகே நடனம் ஆடிய பாம்புகள்; சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ காட்சிகள்

மதுரையில் குடியிருப்பு பகுதி அருகே நடனம் ஆடிய பாம்புகள்; சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ காட்சிகள்

எழுதியவர்: mohan December 9, 2023, 10:11 am

மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு பகுதியில் உள்ள குடியிருப்புக்கு அருகே உள்ள காலியிடத்தில் செடிகொடிகள் படர்ந்து காணப்படும் இடத்தில் இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து நடனம் ஆடியுள்ளது. அதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதனை வீடியோ-வாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதை தொடர்ந்து வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் பாம்புகள் நடமாட்டம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கு அச்சமாக இருப்பதால் பாம்பை பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர் குடியிருப்பு பகுதிகளில் பாம்பு நடனமாடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!