18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் ஆசிரியையிடம் செயின் பறிப்பு: இருவர் கைது

ராமநாதபுரத்தில் ஆசிரியையிடம் செயின் பறிப்பு: இருவர் கைது

எழுதியவர்: mohan December 9, 2023, 9:58 am

இராமநாதபுரம் ஆத்மநாத சுவாமி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவர் திருப்புல்லாணி டாஸ்மாக் பணியாளராக உள்ளார். இவரது மனைவி ராதிகா. இவர் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி பாட ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று முன் தினம் மாலை இவர் பணி முடிந்து, தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டு வாசல் முன் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் நின்ற அடையாளம் தெரியாத இருவர் அவரிடம் முகவரி கேட்பது போல், ராதிகா கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றனர் . அவர் தனது தாலியை பற்றிக்கொண்டதில், 3 பவுன் ராதிகா கையில் சிக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அவர்கள் 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து கேணிக்கரை போலீசில் ராதிகா புகார் அளித்தார். இதன் பேரில், தங்கதுரை எஸ்பி அறிவுறுத்தல் படி, டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் குற்றப்பிரிவு எஸ்ஐ கஜேந்திரன், ஏட்டுகள்பாலமுருகன்,புகழேந்தி, வளத்தீஸ்வரன்,முத்துராக்கு ஆகியோர் அடங்கியதனிப்படை அமைக்கப்பட்டது. இப்படையினர் இராமநாதபுரம்- ராமேஸ்வரம் வரை 50க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா வீடியோ பதிவுகளை துரிதமாக ஆய்வு செய்தனர். ஆய்வின் படி, கோவை காளப்பட்டி ரோடு மல்லேஷ் மகன் சூர்யா @ சூர்யபிரசாந்த் 23,திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் கோபி @ கோவிந்தராஜ் 24 ஆகியோரை கைது செய்து ராதிகாவிடமிருந்து பறித்துச் சென்ற தாலிசெயின், அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.துரிதமாக செயல்பட்டு சம்பவம் நடந்து 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைதுசெய்து, வழிப்பறி பொருட்களை மீட்ட குற்றப்பிரிவு போலீசார், ராமநாதபுரம் தீவிர குற்றத்தடுப்பு போலீசாரை எஸ்பி தங்கதுரை பாராட்டினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!