17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறுதானிய உணவு பொருட்கள் தயாரிப்பு கண்காட்சி: சிறப்பிடம் பிடித்தோருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்

சிறுதானிய உணவு பொருட்கள் தயாரிப்பு கண்காட்சி: சிறப்பிடம் பிடித்தோருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்

எழுதியவர்: mohan December 9, 2023, 9:51 am

இராமநாதபுரம் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் சர்வதேச சிறுதானிய உணவு திருவிழா நடந்தது. சிறுதானிய உணவு கண்காட்சி அரங்கை மாவட்ட வருவாய் அலுவலர் இரா. கோவிந்தராஜலு துவக்கி வைத்து பார்வையிட்டார். சிறந்த சிறுதானிய உணவு அரங்கம் அமைத்த கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, ராமநாதபுரம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறைக்கு முதல் மூன்று பரிசு தொகை தலா ரூ 5000, ரூ 3000, ரூ.2000 மற்றும் சிறுதானிய விழிப்புணர்வு குறித்த பல்வேறு போட்டிகளில் வென்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள். அங்கன்வாடி உறுப்பினர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு பாராட்டு சான்று வழங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், வேளாண் இணை இயக்குநர் சரஸ்வதி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முத்துக்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார், வருவாய் கோட்டாட்சியர் கோபு, நுகர்வோர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி அமைப்பு தலைவர் பேராசியர் (ஓய்வு) துரைசிங்கம். வட்டாட்சியர்கள் தமீம் ராஜா (உணவு பொருள் வழங்கல் துறை), செந்தில்குமார், ஸ்ரீதரன் மாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!