17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே முதியவரை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரரை காப்பாற்ற போலிசார் முயற்ச்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உசிலம்பட்டி அருகே முதியவரை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரரை காப்பாற்ற போலிசார் முயற்ச்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எழுதியவர்: mohan December 8, 2023, 12:20 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சி;ன்னக்கட்டளையைச் சேர்ந்தவர் லட்சுமணன்(72).விவசாயி.இந்நிலையில் இதே ஊரைச் சேர்ந்த முத்து(எ)முத்தையாவிற்கும் லட்சுமணனுக்கும் இருந்து வந்துள்ளது.சம்பவத்தன்று அதே ஊரிலுள்ள தன்னுடைய மகள் விசேஷ நிகழ்ச்சியை முடித்து விட்டு இரவு வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.அப்பொழுது ராமர் மற்றும் அவருடைய மகன் முத்து ஆகிய இருவரும் தனியாகச் சென்ற லட்சுமணனை வலிமறித்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர்.மேலும் முத்து தன்னிடமிருந்த கத்தியால் லட்சுமணன் தலையில் வெட்டியதாகக் கூறப்படுகின்றது.இதில் லட்சுமணன் மயக்கமடைந்து விழுந்துள்ளார்.சம்பவமறிந்த இவருடைய மருமகன் ஆண்டிச்சாமி மயக்கமடைந்த லட்சுமணனை 108 ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.மேலும் இதுகுறித்து லட்சுமணன் முத்து தன்னை கத்தியால் வெட்டியதாக சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.ஆனால் போலிசார் முத்துவிடம் பணத்தை பெற்றுக் கொண்டு அவருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கல்லால் தாக்கியதாக எழுதித் தருமாறு மிரட்டுவதாகவும் கூறப்படுகின்றது. நீதியை காக்க வேண்டிய காவலர்களே முதியவரை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரருக்கு ஆதரவாக செயல்படுவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!