18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் பாரதியார் விழா

சோழவந்தானில் பாரதியார் விழா

எழுதியவர்: mohan December 7, 2023, 6:49 pm

டிசம்பர் 11ஆம் தேதி பாரதியார் தினவிழா வருவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கல்வித்துறை முன்னதாக ஒரு வாரம் விழாவை நடத்துவதற்கு அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரிடப்பட்டுள்ளது. இதன் பேரில் சோழவந்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்திரத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கம் பகல் நேர பாதுகாப்பு மையத்தில் பாரதியார் விழா நடந்தது. விழாவிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ராஜாத்தி முன்னிலை வகித்தார். மைய ஆசிரியை தேவிகா வரவேற்றார். ஆசிரியர் சிறப்பு பயிற்றுநர்கள் ரூபா, உமா ஆகியோர் இந்த மையத்தின் செயல்பாடும் மாற்று திறனாளி மாணவ மாணவிகள் பயன்குறித்து பேசினர்.இங்கு படிக்கக்கூடிய மாற்று திறனாளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பெற்றோர்கள் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!