18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் வட்டார அளவிலான துளிர் வினாடி வினா போட்டி

இராமேஸ்வரம் வட்டார அளவிலான துளிர் வினாடி வினா போட்டி

எழுதியவர்: mohan December 7, 2023, 11:40 am

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ராமேஸ்வரம் வட்டார அளவிலான துளிர் வினாடி வினா போட்டிஅரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்தது.ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெய கிரிஸ்டல் ஜாய்துவக்கி வைத்தார்.மாவட்ட பொருளாளர் சசிகுமார் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். இதில் 10 பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணாக்கர் பங்கேற்றனர்.6,7,8 வகுப்பு பிரிவில் தனுஷ்கோடி நடுநிலைப்பள்ளி, தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி, ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் 3 இடம் பிடித்தன.9,10 வகுப்பு பிரிவில் கரையூர் அரசு உயர்நிலைப்பள்ளி, ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி, தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் 3 இடம் பிடித்தன. +1, +2 பிரிவில் வேர்க்கோடு புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி, தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் 3 இடம் பிடித்தன. போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கருக்கு தலைமை ஆசிரியை ஜெய கிறிஸ்டல் ஜாய் புத்தகம், சான்றிதழ் வழங்கினார். முதலிடம் பிடித்த பள்ளிகள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வர். மாவட்ட துணைச் செயலாளர் ஜெரோம் நன்றி கூறினார். ஆசிரியர்கள் மரிய மிக்கேல் சாந்தி, ஆரோக்கிய ரீகா, மலர்க்கொடி, தர்மராஜ், சீனிவாசன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாவட்ட துணைச் செயலாளர் ஜெரோம் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்

ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!