17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமேஸ்வரம் மீனவர் 8 பேரை படகுடன் சிறைபிடித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர் 8 பேரை படகுடன் சிறைபிடித்த இலங்கை கடற்படை

எழுதியவர்: mohan December 7, 2023, 11:36 am

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் அறிவுறுத்தல் படி,ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நவ.30 முதல் தொழிலுக்குச் செல்லவில்லை.இந்நிலையில் புயல் அபாயம் நீங்கியதையடுத்து படகுகள் தொழிலுக்குச் செல்லாம் என ராமநாதபுரம் (வடக்கு, தெற்கு), மண்டபம், ராமேஸ்வரம் மீன்வளத்துறையினர் நேற்று மாலை அறிவித்தனர். இதை தொடர்ந்து பாக்ஜல சந்தி கடல் பகுதியில் விசைப்படகு மீனவர்கள்6 நாட்களுக்கு பின்இன்று காலைதொழிலுக்குச் சென்றனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 447 விசைப்படகுகள் இன்று காலை தொழிலுக்குச் சென்றன. இவர்கள் இன்று மதியம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபம் பதிவெண் கொண்ட உயிர்த்ரராஜ் என்பவரை படகை சிறைப்பிடித்தனர். அதிலிருந்த ராமேஸ்வரம் மீனவர் முனியசாமி 58, தங்கச்சிமடம் மீனவர் தல்சா 50, பாம்பன் மீனவர்கள் ஜெயஸ்டன் 36, சார்லஸ் 54, லாசர் கெபிஸ்டன் 30, தினேஷ் 38, அருள் பிரிஸ்டன் 28, ஜான் சமிமோன் 31 ஆகிய 8 பேரை கைது செய்து, மன்னார் துறைமுகம் கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.

ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!