18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan December 7, 2023, 10:39 am

பாபர் மஸ்ஜித் தகர்ப்பு தினம் 31 ஆம் ஆண்டையொட்டி,ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ரியாஸ் கான் தலைமை வகித்தார். மாநிலத் துணை தலைவர் ரஃபிக் அஹமது கண்டன உரையாற்றினார்.மாவட்ட செயலாளர் நஜ்முதீன், பெரியபட்டினம் நகர் தலைவர் பீர் முகைதீன், சாகுல் ஹமீது, மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஜெமிலுநிஷா மாவட்ட துணைத் தலைவர்கள் முஹமது சுலைமான், சோமு, பொருளாளர் ஹசன் அலி, விமன் இந்தியா மூவ்மென்ட் மாநில செயற்குழு உறுப்பினர் தௌலத்யா, மீனவர் அணி மாநில துணை ஒருங்கிணைப்பாளர் முத்தவா, விம் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம், செயலாளர் சித்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொண்டரணி மாவட்ட தலைவர் சகுபர் சாதிக், பொறியாளர் அணி மாவட்ட தலைவர் ஜலால், சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் நதீம், ஊடக அணி மாவட்ட தலைவர் சுபைர் ஆப்தீன், விவசாய அணி மாவட்ட தலைவர் கஜினி முஹமது, விசிக மதுரை மண்டல முன்னாள் தலைவர் யாசின், திருவாடானை தொகுதி தலைவர் சிராஜுதீன், ராமநாதபுரம் கிழக்கு தொகுதி தலைவர் சுலைமான், ராமநாதபுரம் மேற்கு தொகுதி செயலாளர் அக்பர் மற்றும் நகர், தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், செயல் வீரர்கள், பொதுமக்கள், ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.ராமநாதபுரம் நகர் பொருளாளர் வதுத் நன்றி கூறினார்.

ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!