18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் சார்பில் நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.,

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் சார்பில் நிவாரண பொருட்களை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.,

எழுதியவர்: mohan December 6, 2023, 6:59 pm

மிக்ஜாம் புயல் தாக்குதலால் சென்னை மாநகரம் இன்றும் மீளமுடியாது பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது., இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, உணவு, மின்சாரமின்றி பலரும் மழைநீரில் தவித்து வரும் சூழலில் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் நிவாரண பொருட்களை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சார்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்து சென்னை மக்களுக்காக சுமார் 75 ஆயிரம் மதிப்பில் அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி, பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.,உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ரஞ்சனி சுதந்திரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், கண்ணன் உள்ளிட்டோர் பொருட்களை வாகனத்தில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!