18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் கைது.

மதுரை – அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் கைது.

எழுதியவர்: mohan December 6, 2023, 6:35 pm

மதுரையில் அண்ணல் அம்பேத்கரின் 67வது நினைவுநாளையொட்டி அவுட் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் மே 17 இயக்கம் புரட்சி பாரதம் கட்சியினர் என்பன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினருக்கும் அர்ஜுன் சம்பத் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் அவர்கள் கைது செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!