17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பணி மருத்துவர் தனி அறையில் உறங்கிக் கொண்டிருப்பதாக புகார் – மருத்துவ அதிகாரி நடவடிக்கை எடுக்க நோயாளிகள் வேண்டுகோள்.

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பணி மருத்துவர் தனி அறையில் உறங்கிக் கொண்டிருப்பதாக புகார் – மருத்துவ அதிகாரி நடவடிக்கை எடுக்க நோயாளிகள் வேண்டுகோள்.

எழுதியவர்: mohan December 6, 2023, 1:18 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனை , புறநகர் பகுதிகளில் மிகப்பெரிய மருத்துவமனையாக கருதப்படும் நிலையில், இங்கு வெளி நோயாளிகள் பிரிவில் பணியில் இருக்கும் பணி மருத்துவர் பணியில் ஈடுபடாமல் , அங்குள்ள தனி அறையில் ஓய்வெடுத்துக் கொள்வதாக நோயாளிகள் புகார் தெரிவிப்பதுடன்,அங்கு சிகிச்சை அளிப்பதற்கு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவிகள் பயன்படுத்தப்படுவதால் நோயாளிகள் பெரும் அச்சத்தில் வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மருத்துவ அதிகாரி உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பணியில் இருக்கும் மருத்துவரை பணியில் ஈடுபடச் செய்யவும், மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!