17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

சோழவந்தானில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

எழுதியவர்: mohan December 5, 2023, 7:04 pm

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக மாவட்ட செயலாளர் முருகேசன் ஆலோசனையின் பேரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது .சோழவந்தான் நகர கழகம் சார்பில் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் தென்கரை திரவியம் சோழவந்தான் நகர் கழக செயலாளர் ராமசாமி அவைத்தலைவர் விஜயன்மாவட்ட பிரதிநிதி முத்து டீக்கடை ராஜேந்திரன் அரிமா மகேந்திரன் பாலகிருஷ்ணாபுரம் ஈஸ்வரன் பரஞ்சோதி ஊத்துக்குளி ராஜேந்திரன் வார்டு செயலாளர்கள் நல்ல முருகன் மீன் ஜெயபாண்டி மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் முள்ளி பள்ளத்தில் வாடிப்பட்டி ஒன்றிய கழகம் சார்பில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது/ இதில் ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!